உன்னை நினைத்து
உன் அருகில் இருப்பதற்கும்
உன்னை அடைவதற்கும்
எனக்கு வரம் இல்லை
இவ்வுலகில் உன் உருவத்தை
காண்பது போல் ஒரு இன்பம்
வேறு எதிலும் இல்லை
உன்னை நினைத்து நினைத்து
ஒவ்வொரு நாளும் வேதனை
படுகின்றேன்
வேறு நான் என்ன செய்வேன்
ஏன் நாம் சந்தித்தோம் ,,?
ஏன் நாம் பழகினோம் ..?
அது என் உள்ளத்திற்கு
வேதனையாக உள்ளது
நாம் நினைத்ததெல்லாம்
நிறைவேறுவதில்லை
இவ்வுலகில்
திரும்ப சந்திக்கும் வரை பிரிவோம்
நீ நீண்ட நாள் வாழனும் ..
உன் நேசத்தை அடைய முடியாத
ஒரு துர்பாக்கிய பெண்ணானேன்...
இல்முன்னிஷா நிஷா