சின்ன சின்ன வீடுகள்

சிவில் இன்ஜீநீயரிங்கா படித்தது
சிறிய எறும்புகள்
சிறிதாய் தனக்கென வீடு கட்டுது

சின்ன புத்தி மாந்தர் பலரும்
சிவில் இன்கிநீயரிங் படிக்காமல் கூட
சிறிதாய் நிறைய வீடு கட்டுகின்றனர்

அது சிறிய வீடு அல்ல - சின்ன வீடு....!

இச்சை கொண்ட பச்சை மனிதர்களே

புகுந்து பார்த்தால் புதுசும் பழசு
பூட்டி வையுங்கள் உங்கள் போக்கிரி ஆசையை

பூசியுங்கள் உங்கள் பழைய வீட்டை - அங்கே
பூந்தோட்டம் இன்னும் பூத்திருக்கு.....!

புரிந்தது உங்களுக்கு அதன் தேன் மட்டும்
புரியாதது இன்னும் அதன் அமுதெனும் இனிமை

ஹையோ பாவம் நீங்கள்......!

எழுதியவர் : (7-Nov-12, 10:57 pm)
சேர்த்தது : ரஞ்சிதா
பார்வை : 155

மேலே