உரியவர்களுக்கு மட்டுமே இந்த சமன்பாடு!

ஞானவிழிக்ளுக்கு மட்டுமே
நெருப்பாற்றின் உட்புறமும்
களிமுகமும் தெரியும்.
அஞ்ஞானக்கண்கள் அறியக்கூடியதல்ல
விஸ்வரூபத்தின் அடியும் முடியும்.
கூட்டில்அடைக்கமுடியுமா
புயலாற்றிக் பிரபாகத்தை
சிறுசிறு பூனைக்குட்டிகளாய்
மடிவிளையாடிவிட்டு
விடைகொள்ளும் ஒவ்வொருதடவிலும்
சாவது அவர்களால் நாங்களும்தான்.
கரும்புலிகள் பலவினமான இனம் ஒன்றின் பலம்.
தலைவன் சென்னதே சரி
அவர்களை வரையத்தொடங்கியது பிளை.
ஆயினும் தூரிகை தோர்க்கும் போதெல்லாம் ஓவியன் வெற்றிஅடைகின்றான்
கரும்புலிகளுக்கு மட்டுமே இந்த சமன்பாடு
(கவிஞர் புதுவைஇரத்தினதுரை)

எழுதியவர் : கவிஞர் புதுவைஇரத்தினதுரை (8-Nov-12, 12:33 am)
சேர்த்தது : அந்தணன்
பார்வை : 210

மேலே