அயல் நாடு வாழ்கை
அயல் நாட்டில் இருக்கிறோம் - நாங்கள்
அனாதைகளும் அல்ல
ஆசைகள் எங்களுக்கும் உண்டு
நாங்கள் பொம்மைகளும் அல்ல
சகோதிரின் திருமணத்தை
சீடியில் பார்க்கிரோம்
பெற்றோரின் உடல் நலத்தை
தொலைவில் இருந்தது
தோலைப்பேசியில் விசாரிக்கிறோம்
இந்த இடைப்பட்ட காலத்தில்
அங்கு சில
இறப்புகளும் நிகழ்கின்றன
அங்கு இறந்த்தவர்களுக்கு
இங்கிறந்தே கண்ணீர்
அஞ்சலியும் நடக்கின்றன
காதல் கொண்ட பலருக்கோ
மாசம் மாசம் போன் பில்லும்
தான் எகுருது
கடன் கொண்ட பலருக்கும்
மாசம் மாசம்
கடன் சுமையும்தான்
குறையுது
அங்கு கட்டுனவள விட்டுவிட்டு
எனக்கென்ன கடல் கடந்துவர
ஆசையா
காலம் எங்கள கேக்குது
காசு எங்க ராசையா
பாலபோன காசுபணம்
சம்பாரிக்க - இந்த
அயல் நாட்டிற்கு
நாங்கள வந்தோம்
இங்கு எங்களை
அரவணைக்க அன்னையும் இல்லை
ஆதரிக்க தந்தையும் இல்லை
அப்பப்போ வந்தது போகும்
அவளின் நினைவும்
எப்போதுமே எங்களுடன்
இருக்கும்
தன்னலம்மற்ற ஒருசில நட்பும்
எங்களுக்கு இங்கே
ஆறுதலாய் இருக்கிறது
இங்கு எங்கள் உடல்நிலை
சரி இல்லை என்றாலும்
எங்கள் ஊதியத்தை
மட்டுமே நினைத்துகொண்டு
வேலைக்குச்செல்லும் இந்த
வலியும் வேதனையும்
என்றுமே நிரந்தரம் அல்ல என
எங்களின் எதிர்கால
நாட்களை நோக்கி
அசை போட்டுக்கொண்டே
எங்கள் நாட்கள் -இங்கு
நகர்ந்த்துகொண்டு இருக்கின்றன
அயல் நாட்டில் இருக்கிறோம் - நாங்கள்
அனாதைகளும் அல்ல
ஆசைகள் எங்களுக்கும் உண்டு
நாங்கள் பொம்மைகளும் அல்ல