இன்றும் என்றும் - நீயே முதன்மையானவள்

ஐயம் கொண்டேன் - உன்

அழகை கண்டு அல்ல

உன் அன்பான பேச்சை கேட்டு ,

எதிரியும் உன் பேச்சில்

அடிமைஆவான்

எமனும் -உன்

அன்பில் விலகி போவான்

இதில் நான் மட்டும்


என்ன விதிவிளக்கா

உன்னிடம் நான் - காதல்

சொன்னது ஒரு ஆணின்

உணர்ச்சின் வெளிப்பாடு

அதற்காக உன்னிடம் - நான்

மண்டிஇட்டு மனம் வருந்தி

மன்னிப்பு கேட்கிறேன்


நீ மிகவும் உயர்வானவள் - மேலும்

உன்னமானவள்

நீ எப்போதும் - என்னை

நெச்சில் தாங்கும்

காதலியாய் இருப்பதைவிட

தோளில் தாங்கும்

தோழியாக இருப்பதே

எனக்கு போதும்

நம் பயணம் -இவ் உலகில்

இன்னும் வெகு தூரம்

இருக்கிறது

இந்த பயணத்தில்

நாம் ஒரு சிலரை - மட்டுமே

அன்பாகவும் ஆழமாகவும்

நேசித்திருப்போம்

அதில் நீயே - என்

பெற்றோருக்கு அடுத்தபடியாக

இன்றும் என்றும் முதன்மையானவள்
--
கதிர்

எழுதியவர் : கதிரவன் , ஆத்தூர் (8-Nov-12, 5:21 pm)
சேர்த்தது : kathir86
பார்வை : 205

மேலே