கர்ணன்

குந்தி தன் மந்திரம் பரிதியின் துணையொடு
எழுதிய எழிலுரு கவிதை
சந்திரன் பொலிவொடு கவசகுண்டலமொடு
பிறந்த நல்லுரு மதலை
பந்துக்கள் பழிஅஞ்சி நதியின் வழியொடு
தாயால் விடப்பட்ட ஈரம்
வந்தனை கூறி வணங்கும் திறம் இருந்தும்
விதியால் வஞ்சிக்கப்பட்ட வீரம்!

எழுதியவர் : (9-Nov-12, 4:41 pm)
சேர்த்தது : usharanikannabiran
பார்வை : 221

மேலே