மரணப்போர்

எதிரில் தெரியும் மரணம்
எட்டிப்பார்க்கிறேன்
எகிறிக்குதிக்கிறேன்
எதையுமே காணோம்
எவராவது
ஏதாவது
எப்படியாவது
ஒருபிடி அடக்கித்தந்தால்
ஏறிவிடுவேன்

துரத்துகிறது மரணம்
கையில் மரணத்தைத்துரத்திம்
துப்பாக்கிப் பாத்திரம்
சோற்றுத் தோட்டாக்கள்தான் தேவை
அணுகுண்டு அரிடசிமூடைகள் போதும்
அப்படியே மரணத்தை திசைதிருப்பிவிடலாம்

மானியத்தில்
இரண்டு மல்டி மரவள்ளி
மனமிரங்கி வாங்கித்தாருங்கள்
மாட்டிக்கொள்ளாமல்
மரணத்தை
மறைத்துவைக்கிறேன்.

எழுதியவர் : Roysten (9-Nov-12, 8:07 pm)
சேர்த்தது : Roysten
பார்வை : 185

மேலே