மீண்டும் ,உலக அழுக்கி நீ !!

உலக அழுக்கி நீ !!

என்ன ? மீண்டும் உலக அழுக்கியா?

என பதற வேண்டாம் !

உயிரே !

உயிர் சிதற வேண்டாம் !

கைகள், கால்கள் உதற வேண்டாம் !

அளவில்லா அழகை கொண்டவள் நீ

உன் அழகின் மயக்கத்தில், அழுத்தத்தையும்
அளவில்லாமல் , அழுந்த அழுத்தியதால்
உலக அழகி நீ , உலக அழுக்கியாய் !!!

உலக அரக்கி நீ !!!

ஈதென்ன அடுத்த குண்டு ?
என நினைக்க வேண்டாம் !

என் மனதினை நின் இனிமை
நினைவுகளால் நேரம்காலமின்றி
அரக்கிக்கொன்டே இருப்பதால்

என்னை தவிர, தேவதை நீ
உலகிற்க்கெல்லாம் அரக்கியாய் !

உலக கிறுக்கி நீ !!

அடிப்படை தமிழின்,
அடி படியையும் அறியாதவனை

அழகாய் இல்லாவிட்டாலும் ,ஏதோ கவிதை என

ஒருசில கிறுக்கல்களை கிறுக்கிடும்
கிறுக்கல் வரம் தந்திடும்

என் அழகி நீ கிறுக்கியாய் !!

எழுதியவர் : aasaiajiith (11-Nov-12, 7:53 pm)
பார்வை : 120

மேலே