ஆரம்பம் & முடிவு
அரசியல்வாதியை தேர்ந்தெடுப்பதில் மக்களின் மனம் முடிவு செய்தால்
அரசாங்கத்தின் சொத்து குவிப்பு ஆரம்பமாகும்
அரசியல்வாதியின் பணம் முடிவு செய்தால்
அரசியல்வாதியின் சொத்து குவிப்பு ஆரம்பமாகும்
அரசியல்வாதியின் முடிவு பிச்சை போடுவதாக இருந்தால்
மக்களுக்கு இலவசம் ஆரம்பமாகும்
மக்களின் முடிவு மறுப்பதாக இருந்தால்
அரசியல்வாதியின் அடக்கம் ஆரம்பமாகும்
மாணவர்களின் திறமையை அறிவு முடிவு செய்தால்
ஞாலத்தின் வளர்ச்சி ஆரம்பமாகும்
மாணவர்களின் திறமையை மதிப்பெண் முடிவு செய்தால்
மாணவர்களின் ஞாபக சக்தியின் வளர்ச்சி ஆரம்பமாகும்
பள்ளியின் முடிவு 12 ஆக இருந்தால்
கல்லூரி ஆரம்பமாகும்
பள்ளியின் முடிவு பாதியாக இருந்தால்
பணி ஆரம்பமாகும்
சந்தேகத்தின் முடிவு தெளிவாக இருந்தால்
குடும்பத்தில் சந்தோஷம் ஆரம்பமாகும்
சந்தேகத்தின் மடிவு குழப்பமாக இருந்தால்
குழப்பத்தில் குடும்பம் ஆரம்பமாகும்
பிறப்பின் முடிவு இயற்கையாக இருந்தால்
மறதி ஆரம்பமாகும்
பிறப்பின் முடிவு செயற்கையாக இருந்தால்
மனக்கவலை ஆரம்பமாகும்
காதலின் முடிவு இனிப்பாக இருந்தால்
கரு வளர்ச்சி ஆரம்பமாகும்
காதலின் முடிவு கசப்பாக இருந்தால்
கல்லறை வளர்ச்சி ஆரம்பமாகும்
உழைப்பின் முடிவு வெகுமதியாக இருந்தால்
மனதில் மகிழ்ச்சி ஆரம்பமாகும்
உழைப்பின் முடிவு வியர்வையாக இருந்தால்
மன உலைச்சல் ஆரம்பமாகும்
தீர்ப்பின் முடிவு நேர்மையாக இருந்தால்
தர்மத்தின் வளர்ச்சி ஆரம்பமாகும்
தீர்ப்பின் முடிவு நேர்மாறாக இருந்தால்
தீவிரவாதத்தின் வளர்ச்சி ஆரம்பமாகும்
நம்பிக்கையின் முடிவு கடவுளாக இருந்தால்
உழைப்பின் ஆரம்பம் அமைதியாக இருக்கும்
நம்பிக்கையின் முடிவு கடமையாக இருந்தால்
உழைப்பின் ஆரம்பம் அருமையாக இருக்கும்
விவசாயியின் முடிவு நிலத்தில் விதைப்பதாக இருந்தால்
விளைச்சல் ஆரம்பமாகும்
விவசாயியின் முடிவு நிலத்தை அளப்பதாக இருந்தால்
மனை விற்பனை ஆரம்பமாகும்
ஆரம்பத்தின் முடிவு சிறப்பாக இருக்க
ஆரம்பம் முதல் முடிவுவரை சாந்தமாக இரு