"என் ஆயுள் முடியக்கூடும்"

சோகங்கள் என்னுள் சேர்க்கிறேன் பெண்ணே,,,
தனிமையில் எனக்கு துணையாய் இருக்கும் என்று!!!
என் மன கண்ணீர் துளிகள் காய்ந்து போகின்றன பெண்ணே,,,
துடைக்க யாரும் இல்லாமல்!!!
என் விழி சோகம் சொல்லிட யாரும் இல்லை!!!
ஆனால் அதற்கு காரணம் காதல் இல்லை!!!
பிறந்த நாளும் பிடிக்காமல் போகிறது எனக்கு,,,
என்னை பெற்றவர்களே என்னை குறை சொல்லும் பொழுது!!!
ஆதரவாய் பேச அண்ணன் இல்லை!!!
தோள் சாய்த்து ஆதரவு தர தோழி இல்லை!!!
படைத்த பிரமனுக்கும் என்னிடம் இரக்கம் இல்லை!!!
விஞ்ஞானிகள் கொண்டாடும் அளவிற்கு,,,
விஞ்ஞானம் வளரவில்லை!!!
ஆயிரம் கருவிகள் இருந்தும்,,
வேதனையை காட்டும் கருவி இருக்கிறதா!!!
"இல்லை"
எத்தனை ஆண்டுகள் முயன்றாலும்,,
என் சோகங்கள் அனைவரும் புரிந்துகொள்ள,,
பல யுகங்கள் ஆகும்!!!
ஆனால் அவர்களுக்கு புரியும் சமயம்,,
"என் ஆயுள் முடியக்கூடும்" !!!!!!.......

எழுதியவர் : அரவிந்த் .C (12-Nov-12, 10:35 am)
பார்வை : 228

மேலே