மூடரைக் காண்பதும் தீதே

பெண்டிரை ஏளனம் பேசி
பேச்சினில் சாலம் காட்டி
கொண்டவள் முகமே கோண
குடித்ததில் தன்னிலை இழந்து
சண்டையில் சகதியில் விழுந்து
சரக்குக்கு சாட்சி சொல்லும்
மண்டையில் மூளை அற்ற
மூடரைக் காண்பதும் தீதே

எழுதியவர் : தா. ஜோசப் ஜூலியஸ். (12-Nov-12, 3:29 pm)
சேர்த்தது : T. Joseph Julius
பார்வை : 94

மேலே