காதலின் தேவைகள்...?
காதல் உருவாகும் வரை
ஆணுக்கு பெண் போதும்
பெண்ணுக்கு ஆண் போதும்
.....காதல் கருவான பின்னோ....?
வெயிலில் நனைய ..மழை வேண்டும்...,
மழையில் ஆட...மயில் வேண்டும்...,
சாரல் வேண்டும்...,தூறல் வேண்டும்...,
கண்கள் மூடி...பார்வை வேண்டும் ...
அமர்ந்து இருக்க..சிறகு வேண்டும்...,
பறந்து திரிய...கால்கள் வேண்டும்...
இவை மட்டும் போதாது...
பேசி புரிய கவிதை வேண்டும்...,
பேசாமல் புரிய பார்வை வேண்டும்...!