தானேயழிந்தாலும் தாங்கிடும் நட்பு !

நல்லெண்ணம்சூடி வண்ணமாய் நட்பு
நன்மைமட்டுமணியும் உண்மை நட்பு
நன்மைதீமையிலும் கூடவரும் நட்பு
நடப்பதெதுவாயினும் கைவிடாது நட்பு!

அன்பென்றே உயிர்வாழும் ஆருயிர் நட்பு
ஆணிவேராய் தாங்குமெனில் அதுவே நட்பு
இதயத்தை நம்பியே நாணயமான நட்பு
ஈகையேயென்னாளும் அதுவுயிர் நட்பு!

உதயகீதவேதமது உயர்வான கீதமது
ஊட்டி வளர்க்கும் அன்புப் பாசமது
எதையுமெதிர் பார்க்காத நல்நேசமது
ஏணியாய் வாழுமது எட்டியே உதைத்தாலும்!

ஐவிரல் கையிணைப்பானது உருமாறும்
ஒற்றுமையாய் நின்றுவென்று காட்டும்
ஓங்கிவளர்ந்த ஆலமரம் அதுசாட்சி
ஔிவழி எதுவரினுமது அலங்காரம்!

தானேயழிந்தாலும் தாங்கிடும் அன்புமுண்டு
தவமேயிருந்தாலும் கிடைக்காமல் போவதுண்டு
சுயநலஎண்ணம்கொண்டு புகழ்பாடும் அன்புண்டு
பணம்தேடிப் பறந்தோடும் வேஷவிஷ நட்பவையே!

நட்புவேறு காதல்வேறு பிரித்தறிதல் நன்றென்பேன்
நட்பின்பெயரில் கொச்சையாகும் உறவும் தீமைகளே
ஆண் பெண்ணென்று பேதமையின்றி நட்பெனில்
அதுவே மேன்மை யதுவே உண்மை யதுவேநட்பு!

அழியாது அழியாது நட்பென்றும் அழிவதில்லை
அழகது அழகது உலகில் உயர்ந்த அழகது
சுயமில்லை சுயமில்லை நட்புக்கு சுயமில்லை
சுகமது சுகமது உண்மை நட்பு இன்பமான சுகமே!

எழுதியவர் : sankarsasi (18-Nov-12, 12:37 pm)
பார்வை : 340

மேலே