மழை

வருவதுபோல வந்துவிட்டு வங்ககடலில் மறைந்தாயோ...!

வட்டிகடையில கடனவாங்கி வந்தமழைக்கி வெதவெதச்சோம்...!

முத்தநாத்து பிடிங்கிவச்சு முன்னுக்கு பின்னா நட்டுவச்சோம்...!

பிள்ளைபயிறு வாடயிலய்யோ நாங்கதான் அழறோம் வானம் அழலயே...!

ஊருக்கே சோறுபோட ஏறுபுடுச்சோம்
மழையகானாம பறிதவிச்சோம்...!

மரம்வளத்தா வருவியோன்னு வறப்பசுத்தி மரம்வளத்தோம்...!

நிழல்வாடை வயலுக்குள்ள
வெடித்தவயல் சத்தம் எங்க நெஞ்சுக்குள்ள...!

பாடுபட்டு நாங்க வளத்த பச்சபுள்ள பசும்நாத்து
சருகா ஆகவா எருபோட்டோம்...!

அறுவடைசெய்யும் பெண்மயிலே
நீ சாவியறுத்து சமைப்பாயா...?

தண்ணீரில்லா கழனியிலே நாங்க காத்துகிடந்து சுருங்கிவிட்டோம்...!

புயலேதும் வருமான்னு புருவம் தூக்கிபாக்கயிலே
பூத்த மீன்கள் வானத்துல...!

கண்ணீர்திரண்டு ஆறா ஓடுது எங்க கன்னத்துல...!

கன்னத்தில் கழனி செய்துவிட்டால் எங்க கண்ணீறோன்றே போதுமய்யா...!

எழுதியவர் : செந்தீ சூரியன் (19-Nov-12, 2:23 pm)
பார்வை : 144

மேலே