வெட்கம்
இதமான அன்பு தந்தாய்,
இன்பத்தை நீயே அள்ளிச் சென்றாய்,
உறவாகக் கலந்து நின்றாய்,
உரிமையாய் கோரிக்கை விடுத்தேன்,
விடுத்ததும் தவறோ,உடனே
ஆயிரம் கதை சொன்னாய்,
சொன்ன கதையும் சலிக்க வில்லை,
சொல்லாத கதையும் வெளிக்
கொணரவில்லை,அதற்குள்
எத்தனை அவசரமடி, பெண்ணே!
உடனே வெட்கத்தைத் திரையாக
அணிந்து கொண்டாய்,பின் இதயக்
கதவையும் தாழ் செய்து விட்டாய்!
பின் ஒரு முறை உன் முகத்
தாமரை காண எவ்வளவு நாள்
ஏங்க வேண்டும்?