முரண்
விபத்தில் இறந்த மனிதனின் கழுத்தில் கடவுள் செயின்.
அழும் குழந்தை கடவுளுக்கு பாலபிஷேகம்
மரண தண்டனை நிறைவேற்றம் நல்ல நேரம் பார்த்து
புத்தரின் புன்னகை பேரில் ஒரு அழிவு சோதனை
அணுகுண்டு வெடிப்பு.
புனித யாத்திரை வாங்கிய இலஞ்சப்பணத்தில்.
கடவுளுக்கு காணிக்கை அழுக்கான தலை முடி.
கொலைகாரர்கள் ஏறுவர் தூக்கு மேடை அன்று ஆனால் இன்றோ அரசியல் மேடை.
காதலில் கருணை அன்று ஆனால் கருணை + கொலைகள் இன்று
காதல் கடவுளுக்கு பலிகளாக காதலர்களே.