காதல் பூங்குயில்

தங்ககிளியவள் என் வரவையென்னி
தவமிருந்து தனித்திருக்க...

ஆடைபோர்த்திய வீணையே – நான் வந்து மீட்டி
ஆனந்த ராகங்கள் இசைத்தோமே - உன்

கன்னித்தோகை மேனியிலே...
காதல் வந்து ஊற்றெடுக்க...

அமைதி என்னும் வேலிபோட்டு
அமர்ந்த உன்னை தென்றலாய் தீண்டினேன் - உன்

வண்ணக்கழுத்து வலம்புரியை - இங்கு
வளைத்துப்பாரு பெண்குயிலே

வந்துவிட்டேன் உன்னிடமே – என்
வஞ்சி உனக்கே என்றும் என் மனமே

யாரோ என்று இருந்தவளே - இன்று
யாரும் நீயாக தெரிவதென்ன

ஊரே தெரியாது இருந்தவளே... என்
ஊணும் உயிராய் நீ ஆனதென்ன...

எழுதியவர் : செந்தீ சூரியன் (21-Nov-12, 11:52 pm)
பார்வை : 227

மேலே