அவள்... என் வாழ்வை இனிதாக்கிய இசை...

புன்னகை....
என் செவியை வருடிய இசை...
விழி....
என் உயிரை திருடிய இசை...
பேச்சு...
நான் கேட்க துடித்திடும் இசை...
மௌனம்...
என்னை பாடாய் படுத்திடும் இசை..
காதல்...
நான் இசைக்க தயங்கும் இசை...
கண் மை...
என்னை கனிவாய் மயக்கும் இசை...
கால்கள்...
அது புவியில் மலர்ந்திடும் இசை...
கைகள்...
அது காற்றில் வரைந்திடும் இசை...
வருகை...
என்னை காக்க வைத்திடும் இசை...
அவள்...
என் வாழ்வை இனிதாக்கிய இசை...

எழுதியவர் : பாலா ஜி (21-Nov-12, 10:59 pm)
பார்வை : 205

மேலே