சாக்கடையை மூடலாமா?????
![](https://eluthu.com/images/loading.gif)
உன்னை அண்ணனாக ,தம்பியாக,
மாமன்,மச்சான்,அன்னை, தந்தை, இப்படி அத்தணை
உறவையும் சொல்லி அழைக்கும் ஓர் கும்பலுக்கு நீ
வெறும்
ஓட்டு மட்டும் தான்.........
இந்த தொகுதியில் எத்தணை மக்கள் என்ற கேள்வி இல்லை தோழா.............
எத்தணை ஓட்டு என்ற கேள்வியே இருக்கிறது
உன்னை அண்ணா......... என்றும் ,தம்பி என்றும்,
அப்பா,அம்மா, என்றும் அழைக்கும் உதட்டுக்கு கீழே
இதுவும் ஓர் ஓட்டு எனும் எண்ணம் தானே இருக்கிறது
என்றாவது யோசித்திருக்கிறாயா.........
உனக்கு இருக்கும் மதிப்பு என்னவென்று
அந்த கறைக்கு மதிப்பென்ன?
கையெடுத்து உன்னை கும்பிட்ட கைகள் ..........
எங்கே என்று ........
என்றாவது ஒருனாள் உன் வீட்டை சுத்தப்படுத்த
முயற்சி செய்திருக்கிறாயா.......
சாக்கடை என்று மூக்கை நீ மூடுவதால் தான் உன்
வாழ்கை சாக்கடைக்குள்ளேயே இருக்கிறது..
மூட வேண்டியது மூக்கையல்ல
சாக்கடையை.......................