மூங்கில் போல !

வழிந்து விழும்
கூந்தல் அருவியை
காதுவழி கால்வாய்க்கு
கைகாட்டிவிட்டு,
விரியும் விழிகளை
வரிகளில் குவிக்கும்
அதிகாலை வினாடிகளில்
அவள் மேலும் அழகாகிறாள்,
நில்லாது வளரும் மூங்கில் போல !

எழுதியவர் : வினோதன் (22-Nov-12, 2:03 pm)
பார்வை : 328

மேலே