கவிதைப் பூ

இதயத்தைத் திருடும் பெண்களின் மத்தியில்
இவளோ என் கற்பனையைத் திருடிச் சென்றாள்
இவள் பேசும் ஒவ்வொரு வார்த்தையும்
இனிய கவிதையாய் மலரும் ....
இவள் பேசாதிருந்தால் அவை மௌனமாகும் ...
இனியவள் மீண்டும் வருவாளோ ?
இனி என் கற்பனை வளம்பெறுமோ ?
இயல்பான கவிதை நலம் பெறுமோ ?
பார்த்த விழி பரிதவிக்க
பனித்த விழி பளபளக்க
பலநாள் ஏங்கித் தவிப்பது நான் மட்டுமல்ல
பாழாய்ப்போன என் கவிதையும் தான் ...
யாரிவள் என்று என்னைக் கேட்போருக்கு
யாழின் ஓசையாய் ஏழு ஸ்வரங்களாய்
யாரும் கேட்காத இனிய பாடலாய்
யாருக்கும் கிட்டாத அரிய பொக்கிஷமாய்
என்றென்றும் ஏற்றமுடன்
என் இதயத்தில் வீற்றிருக்கும்
என் எண்ணமாக என் எழுத்தாக
என் மன(ண)ம் கமழும் கவிதைப் பூயிவள் ...