தேடல்

பணம் இருக்குமிடத்தில்
பாசத்தை தேடுவதெங்கே?

அன்பளிப்பை எதிர்பார்க்குமிடத்தில்
அன்பை தேடுவதெங்கே?

அணுவுலை வெடிக்குமிடத்தில்
அமைதியை தேடுவதெங்கே?

காமக்கொடூரர் இருக்குமிடத்தில்
கற்பை தேடுவதெங்கே?

இலஞ்சம் வாங்குமிடத்தில்
இலட்சியத்தை தேடுவதெங்கே?

ஊழல் பண்ணுமிடத்தில்
உண்மையை தேடுவதெங்கே?

பொய்சாட்சி பகருமிடத்தில்
பொதுவுடைமை தேடுவதெங்கே?

கடன் வாங்குபவரிடத்தில்
கண்ணியத்தை தேடுவதெங்கே?

கள்ளத்தனமிருக்குமிடத்தில் உண்மையான
காதலை தேடுவதெங்கே?

தன்னலம் இருக்குமிடத்தில்
தாய்மையை தேடுவதெங்கே?

பொல்லாதவர்கள் இருக்குமிடத்தில்
பொறுமையை தேடுவதெங்கே?

கற்பனையை தொலைத்துவிட்டு
கவிதையை தேடுவதெங்கே?






எழுத்து.காம் நண்பர்களே இதில் தவறேதும் இருந்தால் சுட்டி காட்டவும்... உங்களது கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்...

எழுதியவர் : சுபா பூமணி (24-Nov-12, 12:23 pm)
பார்வை : 106

மேலே