முன்னேறு

தோழா
தடைகளை கண்டு
தயங்காதே...
தாண்டி வா
தடைகளனைத்தையும்...

துன்பங்களை கண்டு
துவளாதே...
துடைத்தெறி
துன்பங்களனைத்தையும்...

இகழ்ச்சியை கண்டு
இடிந்துவிடதே...
இவ்வுலகு
இனியுன் கையில்...

மற்றவர் புகழ்ச்சியில்
மயங்கிவிடாதே...
மாற்றியமைத்திடு
மாயவுலகை...

முதலீடு செய்
முயற்சியை...
முன்னேறு வாழ்வில்
மூவுலகம் உன்கையில்...

எழுதியவர் : சுபா பூமணி (24-Nov-12, 12:25 pm)
பார்வை : 125

மேலே