@@@தாய்மை வரம் @@@

பெண்மையை முழுமையடையச் செய்யும்
பெண்மையின் மறுபிறவியாய் மாற்றும்
தாய்மையே ...

பிள்ளைவரம் கேட்டு கோயில்கோயிலாய்
அரசமரம் சுற்றும் அன்பு பெண்மையே ...
தாய்மைவரம் கேட்டு அன்பிற்கு ஏங்கும்
கடவுளின் குழந்தைகள் மனம் மென்மையே...

மலடி என்ற தீயவரின் வார்த்தைகள்
தீயாய் உன்னை சுடுவதுபோல்,
அனாதை என்ற வஞ்சகரின் வார்த்தைகள்
முள்ளாய் அவர்களை குத்துவதை அறியாயோ?

நம் நாட்டில் நூறுக்கு ஒரு தம்பதி மனம் வைத்தால்
இப்படி ஓர் இல்லம் இல்லாமல் போகுமே ...
... கவியாழினி ...

(இங்கு இறுதி வரியை அனைவரும் எடுத்து வளர்க்க அனாதைகள்
என்ற நிலை இல்லாமல் போகும் என்ற நோக்கில் மட்டும் பார்க்கவும்

எழுதியவர் : கவியாழினிசரண்யா.. (24-Nov-12, 12:48 pm)
பார்வை : 244

மேலே