எழுதுகோல் !

நீரிழிவு நோயையொத்த
ஏதோ ஓர் நோய்
என் எழுதுகோல்
தாவித் தழுவுகிறது !
அது, வறண்டு போன
நாக்குடன் - வற்றாத
வளத்துடன் வெள்ளைத்தாளை
வலம் வருகிறது,
வெளிறிய முகத்தோடு !
என்னவென்று வினவினேன் !
நீ உன்னவள் பற்றிய
கற்பனைகள் கருவேற்கும்
பொழுதுகளில்,
உம் வரிகள் காணும் வேகம்
கானகமோ, காட்டாறோ
காணாதது, தோணாதது !
பெரும்பாலும் அவை,
உன் வரிகளின்
முற்றுப்புள்ளிகள்
விழுங்கும் விழாவாகவே
அமைகிறது !
கடைசியாய் சொன்னது...
அவளைப்பற்றிய
உன் வரிகள் - உன்
காதலுக்கு எருவாக !
நானோ, உன் காதலெனும்
விளைநிலத்தில் ஏராக !
உன் உயிர் இருக்கும்வரை,
நீ உளரிகொண்டிருப்பாய்...!
நான் உழுதுகொண்டிருப்பேன் !