மயானம்

ஆண் பெண்
வீரன் கோழை
வள்ளல் கருமி
ஏழை பணக்காரன்
தலைவன் தொண்டன்
நோயாளி மருத்துவர்
முதலாளி தொழிலாளி
அறிவாளி அறிவிலி
உயர்ந்தவன் தாழ்ந்தவன்
இளைஞன் முதியவர்
என்ற பேதங்கள் இன்றி
விழித்திட முடியா உறங்கிடும்
இறுதி ஓய்வு எடுப்போரை
மற்றவர் படுக்க வைத்திடும்
திறந்தவெளி படுக்கைஅறை !
அமைதியே நிலைத்த பூமி !
மக்களே இல்லாத பூங்கா !
மறைந்த உயிர்களின்
மண்ணில் உறைவிடம் !


பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (25-Nov-12, 12:09 pm)
பார்வை : 179

மேலே