தோழிக்கு மழலை செல்வம் 555

தோழியே...

மொட்டுவிட்ட ரோஜாவோ
எட்டு நாளில் மலரும்...

உன்னில் மொட்டுவிட்ட
அவனோ...

காக்கவைத்தான்
திங்கள் பத்து...

உன் கைகளில் இன்று
அன்பு மகன்...

அவன் பால்வடியும்
பூமுகமும்...

அவன் எச்சில் வடியும்
இதழ்கள்...

பார்க்கும் உன்
விழிகளுக்கு...

இனி என்றென்றும் உனக்கு
உணவாக.....

(சமர்ப்பணம் அன்பு தோழி தமிழ்க்கு மழலை செல்வம்)

எழுதியவர் : முதல் பூ பெ.மணி (25-Nov-12, 7:46 pm)
பார்வை : 227

மேலே