ஆன்மாவின் புலம்பல்...

புலம்பல்...

குப்பைத்தொட்டிலில்
சவமாய் சருகான
குழந்தையின் ஆன்மா...

அன்னையே...

அன்றே
எனை நீ
வேண்டாப்பொருளாய்
நினைத்திருந்தால்...

தடை
கொள்ளச்செய்து
தடுத்திருக்கலாமே!

உறைக்குள்
நானே...
உறைந்திருப்பேனே...

அண்டமே...

அன்று
எனை நீ
அவசரப்பட்டு
அணைத்திருக்காவிட்டால்...

முண்டியடித்து
முதலிடம் பிடிக்காமலே...

அறைக்குள்
நானே...
அழிந்திருப்பேனே!

தாயே...

தங்கிவிட்ட
எனை நீ
வேண்டாமென்ற
எண்ணமிருந்தால்...

மருந்துண்டு
எனை
மாய்த்திருக்கலாமே...

உன் உதிரத்தோடு
ஊமையாய்
உடைந்திருப்பேனே...

ஏன்...???

உலக
வெளிச்சம்
காட்டி
எனை வெளியேற்றினாய்...!!!???

எழுதியவர் : சலீம் (25-Nov-12, 1:31 pm)
பார்வை : 237

மேலே