அவன் போகையில்
விழிசாயக் கூட விரும்பவில்லை - அவன்
விழித்திருக்கிறேன் விழி விளிம்பில் நிருடன் நான்...!
திண்டமையின் கோரத்தை உணர்ந்தேன்என்னவனின்
விழிகள் என்னை திண்ட மறுத்த அந்த கணத்தில்...!
கனவிலும் நினையாத காட்சிகள் நடந்தேறக்
கண்டேன் ...!
என்னவன் என எண்ணியிருந்தவன்
எனை நிங்கி போகையில்..........
போனது அவன் மட்டும் அல்ல
என் கனவு , காதல் , உறக்கம் , உணர்வு, சிரிப்பு
அனைத்தையும் சேர்த்தெடுத்து போயிருந்தான்...!
உயிர் மட்டும் ஏன் விட்டுவைத்தாய் - தினம்
உன்னை நினைத்து உருகவா? உறுகுலைகிறேன்
உணர்வுகளின் போராட்டத்தில் போதும்
இனியும் வேண்டாம் உன் இரக்கமற்ற
செயல் இபோதேனும்
எடுத்துகொள் எச்சமிருக்கும்
நி மிச்சம் வைத்த என்னுயிர்.....!