திக்கற்றவளாக்கி விடாதே

என் ஆசைகளின் அரசனே...
உன் அன்பை நினைக்கையில்
நெஞ்சம் மகிழ்கிறது
உன் சொற்களை நினைக்கையில்
மனதில் மழை பொழிகிறது
உன் பிரிவை நினைக்கையில்
மனம் வெம்புகிறது
என் உயிரின் மன்னனே...
நீ என்னை நேசித்தால்
உனக்குள் என்னை தொலைத்து விடு
இல்லை என்றால்
பூமிக்கு என்னை இறையாக்கி விடு
உன் அன்பில் தித்தித்தவள் நான்
என்னை திக்கற்றவளாக்கி விடாதே
- அனுஷா