மனக் குமுறல்
எரிமலை ஒன்று
வெடிக்கத் தயாராகிறது!
அதை
சாந்தம் கொள்ளச்
செய்ய முயலும்
இயற்கையின்
அனைத்து முயற்சிகளும்
வீணாகின்றன.
தற்காப்பு நடவடிக்கைகளும்
வீண் போகின்றன.
எரிமலையின் சீற்றம்
வீணென்று புரிய வைக்க
யாரால் இங்கு முடியும்.
அது இயற்கையானது!
அதில் வெந்து சாவதைத்
தவிர வேறு வழியில்லை!
விதியின் செயல் என்று
மனதில் ஏற்று நம்மை
அதன் வசமிழப்போம்.
அல்லது தற்காப்பு கருதி
வேறு இடம் தேடிச் செல்வோம்.
எரிமைலையின் சீற்றத்திற்கு
ஆளாகும் மக்கள் என்ன
பாவம் செய்வதற்களா?
அது விதியின் செயல்.
நம்மை அது புரிந்து கொண்டு
சாந்தம் கொண்டால்
அது தெய்வச் செயல்.
அதை நாம் புரிந்து கொண்டு
அதில் நாம் அழிந்தால் அது விதி.
இயற்கையின் படைப்பில்
எது வெல்லும்?
விதியா அல்லது தெய்வச்செயலா?
அது
நேரத்தைப் பொறுத்தது!
மனிதன்
எதையும் ஏற்கவேண்டிய
நிர்பந்தத்தில்!
எரிமலையை நினைத்து
தன்
மனக்குமுறலை மட்டுமே
அவன் வெளிப்படுத்த முடியும்!
எரிமலையிடம்
வேண்டுகோள், ப்ரார்த்தனை,
யாசகம், பரிந்துரை
எது செல்லும்?
மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்து அறன்
ஆகுல நீர பிற.
எனும்
வள்ளுவனின் மொழிகொண்டு
வாழ மட்டுமே மனிதனால் முடியும்
மற்றவை இறைவன் செயல்