மரணம்
பிறப்புக்களின் இறுதி நிலை
பிறவிகளுக்கெல்லாம் *உறுதி நிலை
முதுமையிலும் வருவதுண்டு
கருவறையிலும் முடிவதுண்டு
அரசனோ அடிமையோ
செல்வந்தனோ பரம ஏழையோ
படித்தவனோ பாமரனோ
யாருக்குமில்லை விதிவிலக்கு
பக்தனோ பாவியோ
நாஸ்திகனோ ஆஸ்திகனோ
எரிப்பவனோ புதைப்பவனோ
யாருக்குமில்லை வெளி நடப்பு
இறுதி நிலை என்பதுண்டு
மறு பிறவி எனவும் சொல்வதுண்டு
யாரறிவார் உண்மை நிலை
ஆர் கண்டார் உண்மை நிலை
மரணம்....
எல்லோருக்கும் பொதுவான பயணம்
யாரும் தவிர்க்க முடியாத தருணம்
எவரும் மீளெழ முடியாத சயனம்
*நிச்சயிக்கப்பட்ட நிலை
-Rikas Marzook -