அன்னையின் கடிதம்

எத்தனை நாட்கள் நீ இல்லாமல்
உன் வருகை தான் என் வசந்தம்...!

வாசலை பார்த்து கொண்டு இருந்தது
எத்தனை நாட்கள் ..!

என் கண்ணீரும் என்னை
கேளி செய்கிறது

என் உதடுகள் புன்னகிக்க மறந்து போனது
நீ இல்லாமல் ...!

தொலைவில் நீ இருந்தாலும்
உன் நினைவுகள் என்றும் என் அருகில் ...!

தொலைபேசி வாங்கி கொடுத்தாய்
ஏனோ உன் நம்பரை கொடுக்க மறந்தே போனாய்..!

இரத்தம் அன்று பாலாக மாறியது
உனக்க கா
இன்று இரத்தம் மட்டுமே வடிகிறது
நீ இல்லாமல் ...

என் பசி உனக்கு உணவாக மாறியது
இன்று உணவு இருந்தும்
பசி இல்லை எனக்கு இன்று ...

என்னை காண வரமாடாயா
என் இறுதி ஊர்வலத்திற்கு கூட...

சொல்ல வார்த்தை இல்லை
என்னிடம்
என் கண்ணீர் மட்டுமே பேசுகிறது....
இப்படிக்கு ,
உன்னை பெற்றவள்
(அன்னை ) .

எழுதியவர் : கவிபூபதி (28-Nov-12, 5:30 pm)
சேர்த்தது : KavithaBoopathi
பார்வை : 109

மேலே