தந்தையின் தங்க மனசு
மகனே !
சொல்லால் எனை வதைக்காதே
சொல்லிவிடு பாரம் என்று
சொல்லாமல் போய் விடுகிறேன்
வெகு தூரம் !
சாடையில் எனை சாடாதே
பாடையில் எனை அனுப்ப நேரம் தேடாதே !
பனை வெட்டி உன்னை பள்ளிக்கு
அனுப்பினேன் !
கல் சுமந்து உன்னை கல்லூரிக்கு
அனுப்பினேன் !
என் பெயரோ இனியன்
நீ எனக்கு கொடுக்கும்
பட்டமோ சனியன் !
மூச்சுமுட்ட மூணு வேளைக்கு
நல்லா திங்க தெரியுது
ஆனால் வேலை செய்ய முடியலையோ
என்கிறாயே !
மகனே
வேலை செய்ய உள்ளம் ஒத்துழைக்கிறது
ஆனால் உடல்
ஒத்துழையாமை இயக்கம்
நடத்துகிறதே !
நான் என்ன செய்ய !
அதற்கு நீ போடாதே பகல் வேசம் என்கிறாயே !
நான் மட்டுமா வேசம் போடுகிறேன்
வாழ்க்கையே ஒரு
வேசம்தானே ௧
நீயும்தான் போடுகிறாய்
பாசம் என்னும் வேசம் !
பரவாயில்லை மகனே
இறைவனிடம் ஒன்று
உனக்காக வேண்டிகொள்கிறேன் இன்று !
உனது முதுமை காலத்தில்
எனது இந்நிலை உனக்கு
நிகழாமல் காக்க
எல்லாம் வல்ல
இறைவனை
பிரார்த்தனை செய்கிறேன் !
*************************

