வருண தேவன்

காற்றைப் பரப்பினான்
காடுகளில் ...

ஊட்டினான் வேகம்
குதிரைகளுக்கு ...

வைத்தான் அறிவை
இதயத்தில் ...

வைத்தான் அக்னியை
நீரில் ...

வைத்தான் இரவியை
வானிலே ...

வைத்தான் சோமத்தை
மலையின் மீதினிலே ...

பரப்பிக் கவிழ்த்தான்
வானம் , பூமி , நடுவானம்
எங்கும் முகில்களாகவே ...

அதனால் ...
நனைந்தது பூமியிலே
மாரியாகவே ...

மழையில் நனைந்தது
தானியம் போலவே ...

பூமியையும்
விண்ணையும்
நனைக்கிறான்
பால் வார்த்த போதிலே ...

போர்த்திக் கொள்கிறது
மலை
முகில்கள் போலவே ...

உன்
வல்லமையால்
வாழ்கிறோமே
நாங்கள்
உயிருக்கு உயிராக ...

நண்பனே !
தேவனே !
சகோதரனே !

பாபம்
இழைத்திருக்கலாம்
முன்பின்
தெரியாமல் ...

எங்களை
விடுவித்துவிடு
பாபங்களிலிருந்து ...

சூதாடியைப் போல
அறிந்தோ
அறியாமலோ
ஏமாற்றம்
புரிந்திருக்கலாம்...

எங்களுக்கு வேண்டும்
உன் அன்பும் கருணையும் ....

எழுதியவர் : செயா ரெத்தினம் (30-Nov-12, 4:04 am)
பார்வை : 126

மேலே