மரணமில்லா மழைத்துளிகள்....
உன்
மேனி கண்டு
மேகங்களும் கூட....
மோகம் கொள்ளும்....
மழைத்துளிகளாய் விழுந்து
உன்
தேகம் தழுவும்....
தன்
தாகம் தீர்த்து
மரணத்தையும் வெல்லும்....
ஆம்...
மீண்டும் மீண்டும்
உயிர்த்தெழும் பீனிக்ஸ் பறவையாய்.....
மண்ணில் மடிந்தாலும்
மேகங்களாய் மீண்டும்
விண்ணில் பிறக்கின்றன....
உன்
தேகம் தொட்ட மழைத்துளிகள்....