சிறுகதை

விடுமுறைக்கு என் வீட்டிற்கு நான் சென்றிருந்த நேரம்...
அதிகாலை மணி 3 இருக்கும்... அனைவரும் குறட்டை விட்டு தூங்கும் நேரத்தில் ஏதோ சத்தம் கேட்டு கண்விழித்துப் பார்த்தேன்.. என் தங்கை சுஜா கட்டில் மீது ஏறி நின்றுகொண்டு ஏர்கோண்டிஷனரை நோண்டிகொண்டிருந்தாள்... என் அப்பாவோ அவளுக்கு இப்படிச் செய் அப்படிச் செய் என ஆணையிட்டுக் கொண்டிருந்தார்..
AC remote control வேலை செய்யாததால் அதை திறந்துவிட முடியவில்லை.. ஜில்லுனு இருக்கும் அறையில் தூங்கிப்பழகியதால் அவர்களுக்குத் தூக்கம் வரவில்லை... பேட்டரியையும் மாற்றிப்போட்டு பார்த்தும் வேலை செய்யவில்லையாம்.. என்னிடம் கொடுத்து என்ன ஏதுவென்று பார்க்க சொன்னாள் என் தங்கை.. நானும் எதை எதையோ தட்டிப்பார்த்தேன்...ஒரு பலனும் இல்லை...
சரி சுஜா, காற்றாடிதான் சுற்றுகிறதே , தூங்க வேண்டியதுதானே என்று கேட்டேன்...இல்லை கா... ஏர்க்கோண் பழகிப்போச்சு, அது இல்லேனா தூக்கம் வர மாட்டுது... எனக் கூறிக்கொண்டே கட்டில் மீது மீண்டும் ஏறினாள்....என்னைப் பாரு, நான் எங்கே வேணும்னாலும் தூங்க முடியும்... அதுக்குதான் காற்றாடி பயன்படுத்தனுங்கிறது என்று சொல்லியபடியே மெத்தை மீது படுத்திருந்தேன்...என்னை மிதித்து விட கூடாதே என்று நினைத்து காலை ஜன்னல் கம்பி மீது எடுத்து வைத்ததுதான் தாமதம்... நிலை தடுமாறி மேலிருந்து மெத்தை மேலே விழுந்தாள்....படக்-எனக் கேட்டது... நேராக படுத்திருந்த நான் மேலும் கீழுமாக கிடக்கிறேன்.. கட்டிலில் உள்ள பலகையை உடைத்துவிட்ட அவள் எப்படியோ லாவகமாகத் தாவி குதித்துவிட்டாள்...
இயற்கையாகவே கொஞ்சம் பருமனான நான், எழ முடியாமல தவித்தேன்.... கையைக் கொடு டுபுக்கு டுபுக்கு என்று திட்டிக்கொண்டே கையை நீட்டினேன்...ஒரு வழியாக எப்படியோ எழுந்து எங்கள் பழைய கட்டிலைப் பார்த்தேன்... ஒரு பக்கம் குழியாக இருந்தது... சந்தோஷமா? எருமை எருமை...நடுராத்திரியிலே என் தூக்கத்தைக் கெடுத்து கட்டிலை இப்படி ஆக்கிட்டியே...
உன் மேலே விழுந்துவிடக்கூடாதெனு நெனச்சுதான் ஜன்னல்-ல காலை வெச்சேன்... இப்படி ஆயிடுச்சுகா...இப்ப எங்க அக்கா நீ தூங்குவே?? ஊம்ம்ம்ம்.... நான் கீழே உன் மெத்தையிலெ படுத்திகிறேன்...நம்ம ரெண்டு பேருக்கும் இதுல இடம் பத்தாதே.. அப்ப வெளியேதான்... ஷபா...
போர்வை, தலையணை, எல்லாவற்றையும் தூக்கிகொண்டு வரவேற்பு அறைக்குச் சென்றோம்... அங்கே பாய் விரித்து நான் படுத்துக்கொண்டேன்... என் அருகில் என் தங்கை தரையில் படுத்துக்கொண்டாள்... காற்றாடியின் அளவை 4-க்குக் கூட்டிவைத்துவிட்டாள்...எனக்குக் குளிருது , ஒழுங்கா 3-க்குக் குறைச்சி வை என்றேன்... எனக்கு சூடா இருக்கு எனக் கூறி குப்புற படுத்துகொண்டாள்... என்னால் குளிர் தாங்க முடியவில்லை, அதே நேரம் எழுந்து அளவைக்குறைக்க சோம்பலாக இருந்தது...என் comfort போர்வையைத் தலைவரைப் போர்த்திக்கொண்டு தூங்கிப்போனேன்... என் மீது யாரோ ஊர்வதுபோன்று இருந்தது... போர்வையை விளக்கிப்பார்த்தால் என் தங்கை சோஃபா மீது போர்வையைப் போர்த்திகொண்டிருந்தாள்...
மேலே பார்த்தேன்.. காற்றாடி நடப்பது போன்று 1-இல் மெதுவாக சுழன்றுகொண்டிருந்தது... ஆஹா.. Plan பண்ணிட்டாய்ங்கடா.... இப்ப எனக்குச் சூடா இருக்கே... என் போர்வையை விளக்கிக்கொண்டு பாயிலிருந்து உருண்டு தரையில் படுத்தேன்... என்னதான் இருந்தாலும் வெறும் தரையில் படுக்கும் சுகமே தனிதான்.... ஏர்க்கோண்-ல படுத்தாக்கூட இவ்வளவு சுகம் கிடைக்காது... இது உண்மையிலே 'இயற்கை ஏர்க்கோன்' என்று நினைத்தவாறே தூங்கிப்போனேன்...