நறுமணம் காணும் வாழ்வு நண்பனுக்கே...

வசந்தம் வந்திடுமென்று
காத்திருந்து... காத்திருந்து... நீ
ஏங்கிக் கிடந்த காலங்களில் - உன்னில்
வாட்டத்தைக் கண்டிருக்கிறேன்

சருகாய் மாறி விறகாகிப் போவாயோ
என்றெண்ணி நான் வாடியதுண்டு
பொறுத்த காலங்கள் விரயமாயினும்
பொன்னேட்டில் பொறிக்கும் காலமினி

பொய்த்த காலங்கள் மாறி - உ(ன்)னை
புதுபிக்கும் காலங்களாக
மாற்றங்கள் மண்ணில் மட்டுமில்லை
- நண்பா
உன்னிலும் காண்கிறேன்..

கைகளில் பணி நியமனம்
கண்களில் மகிழ்ச்சிப் பேரொளி - உ(ன்)னை
கண்டதில்லை இதுநாள் வரையில்
இந்த கண்கொள்ளா காட்சியில்...

வசந்தம் உ(ன்)னை வருட ஆரம்பித்திருக்கிறது
களிப்பினில் இனி துளிர்த்திடுவாய்
முகத்தில் எல்லாம் மகிழ்ச்சிப் பூக்கள் - இனி
நறுமணம் வீசும் நாற்புறமும்...

மரத்தில் பூக்களா? இல்லை பூக்களே மரமாய்
வசந்தத்தில் ஆக்கிரமிப்பில் வண்ணமயமாய்
- இனி
உச்சி தொட்டு ஊடுருவிய மண்ணிலுமே
வேரிலும் பூக்களாய் நீ மாறிப் போவாய்.....

எழுதியவர் : சொ. சாந்தி (1-Dec-12, 10:53 am)
பார்வை : 117

மேலே