பேசும் மழலை (என் காதலி )

அவள் என்னுள் நுழைந்தாள்
நான் நின்ற இடத்திலேயே நடக்கிறேன் !

காற்று என்னிடம் கூறுகிறது
"நீ கண் சிமிட்ட மறந்து விட்டாய் " என்று !

நான் கண்ணாடியை பார்த்தேன்
என் பிம்பம் விழ மறுக்கிறது !

வெற்று வானத்தை கண்டு ரசித்த நான்
நட்சத்திரங்களை பார்த்து பேசி
கொண்டிருக்கிறேன்!

பூ செடிகள் என்மீது கோபம் கொண்டன
தன்னை ரசிப்பதில்லை என்று !

மொழிகளும் வார்த்தைகளும் கூட
என்னை கொலை செய்ய
தேடிக் கொண்டிருக்கின்றன

இத்தனை நாட்களாக
காதலித்து வந்தவன் விட்டு சென்று விட்டான் என்று !

அவள் என்னுள் குடியேறியவுடன் மௌன கடலில் விளைந்த முத்துக்களை எடுக்க
விருப்பம் விளைந்தது !

மழைக்கால நேரத்தில் மயிலைப்போல
நான் மாறினேன் !

அடை மழை பெய்யும் நேரத்தில்
இடி, மின்னலை
ரசிக்கச் சென்றேன் நான் !

வெற்று காகிதமாக இருந்த என்னை
கவிதைக் காகிதமாக மாற்றியது
அவளது வருகை !

யாரும் இல்லாத காட்டில்
மனிதர்களின் காலடி தடத்தைப் பார்த்ததும் கிடைத்த மகிழ்ச்சி தான்
உன்னை நான் முதன் முதலில் பார்த்தவுடன் !

காதலை காதலித்து வந்தஎன்னை,
உன்னை காதலிக்க வைத்து விட்டாய் !

மழைச் சாரல் நேரத்தில் இனிய குரலைக் கேட்பது போல இருந்தது உனது வருகை !

காதலியே !

உனக்கும் எனக்கும் உள்ள பந்தம்
உயிரினத்திற்கும் காயத்திற்கும் உள்ள
உறவு போல !

எழுதியவர் : வேல்முருகானந்தன்.சி (1-Dec-12, 2:27 pm)
பார்வை : 328

மேலே