துடுப்பிழந்த பயணம்

மனதிலென்ன இத்துனை ஆசைகள்
வாழ்விலென்ன இத்துனை மாயைகள்
படகேரி கடல்கடக்க எண்ணி
துடுப்பெடுத்து கரைதேடி

மூன்றாம் உலக இளைஞனின்
மேற்கத்தேய பயணம்
துடுப்பற்ற படகாய்
திசைமாறிப்போன கதை கேளீர்

காற்றடித்த திசை பார்த்து
கூற்றாக அலையடிக்க‌
முகவரியிழந்த அவ்வோடம்
மூழ்காமல் அசைந்தாட‌

தூரத்தெரிந்த கரையொன்றை
இதுவென சிந்தைகொள்ள‌
தூற்றம் கொண்ட இயற்கை
தூரக்கொண்டு செல்ல‌

இலக்கை இழந்துவிட்ட‌ இதயம்
இன்னும் காணவில்லை அபயம்
தூரத்தெரிந்தது தொடர்புள்ளி
துகிலும் தெரியவில்லை முற்றுப்புள்ளி

வீரமிக்க‌ சிங்கமும்
காட்சிப்பொருள்தானே கூண்டுக்குள்
துணிச்சல் கொண்டும்
நீந்தமுடியவில்லை ஆழ்கடலில்

கரைபார்த்தே நாட்கள்
கலைந்துபோயின‌
சலைக்காத அலைகள்
சகாக்கள் ஆயின‌

விதியினை கனைக்கவோ
சாத்தியமில்ல‌
சதியென முனுப்பதும்
சாதுரியமல்ல‌

இலக்கின்னும் மாறவில்லை
நோக்கமும் இன்னும் சாகவில்லை
உயிருள்ளவரை பயணிப்பேன்
உரமாகத்தான் நான் சயனிப்பேன்
-றிகாஸ் மர்ஸூக்-

எழுதியவர் : Rikas Marzook (4-Dec-12, 5:43 pm)
பார்வை : 110

மேலே