வலிவானம் என்னருகில்

இன்னும் என்ன
மிச்சம்...
உயிரே அறுந்தபின்பு
உடலறுத்து
போனாலென்ன?

மனிதனை
மதியாதான்
மனமில்லா மிருகம்.
மனிதத்தை
மிதித்தவன்
மிருக உயிரான்...

உறுப்பெல்லாம்
ஒன்றிங்கே...
உயிரெல்லாம்
ஒன்றிங்கே...

உண்ணும் உணவெல்லாம்
ஒன்றிங்கே...
பிறப்பதும்
வளர்வதும்
வாழ்வதும்
எல்லாமே
ஒன்றுதானே
மூடா!

இடையில்
எங்கு வந்தது
சாதி?

பேதம் சொல்லி
பேயாட்டம் போடுவது
பிழைப்பா?
உலகுயிரில்
ஒன்றை நீ
அடிபணிய
வைப்பதுவுன்
உழைப்பா?

நெஞ்சுரம் குறைவானவன்
ஆயுதம் ஏந்துவான்.
நீ உன்
அறிவின்மையை
மறைக்க
இன்னொருவனை
முட்டாள் என்கிறாயே
முழுமூடா...

நீயுரைத்த
நெருப்புச்சொல்...
நீயடித்த சாட்டையடி
நீவெடித்த
கொடுமைவெடி
இவையால்
வலிவானம்
என்னருகில்...

நெஞ்சுரம் இருந்தால்
அறிவிருந்தால்
எனக்குநீபோடும்
தடைவிலக்கி
ஒரு வாய்ப்பைக் கொடு

நீமுட்டால்
என்பது
யாரும் சொல்லாமலே
உனக்குப் புரியும்.

எழுதியவர் : விமல் (4-Dec-12, 5:53 pm)
சேர்த்தது : சுவிமல்ராஜ்
பார்வை : 76

மேலே