தன்னம்பிக்கை பறவையே !!

கவிஞனாய் ...........
என் அருகில் நீ ...
பத்தாண்டுகளில் இதோ என் கவிதை உனக்கு....
தலைவனாய் ...
தன்னம்பிக்கை கூட்டின் ஆண்பறவையே...
அறிவோடு ஆய்ந்தெடுக்கும் உன் முடிவுகளில்
கவலையின்றி நாங்கள்..
தகப்பனாய்.....
இன்று
நம் மகளுக்கு நீ நாயகன்..
நாளை
நிச்சயம் நீ அவளின் முதல் ரசிகன்..
பக்தனாய்
இறைவனிடம் நீ கொண்ட நம்பிக்கை
அதன்மீது நான் கொண்டேன் அதீத நம்பிக்கை......
கணவனே ....
உன்னால் என் கனவுகளும் காண்கின்றன
“Sweet Dreams”

எழுதியவர் : க்ளௌடி (4-Dec-12, 7:59 pm)
சேர்த்தது : cloudy
பார்வை : 174

மேலே