தெய்வத்தை தாண்டியவள் தாய்

காய்ச்சல் வரும்போதெல்லாம்

தாயின் கைகளை
தேடுகிறது கண்கள் ...
ஆயிரம் உறவுகள்
அருகில் இருந்தாலும்...

'தூங்கு பா' என்பாள்
தூங்காமல் ..

தூக்கத்தில் இருமினாலும்
துடிப்பாள்..
கண் திறக்கும் முன்பே
நிற்பாள் ..

கண்ணீர் கலந்து
தண்ணீர் சுமந்தபடி ...

கொதிக்கும் உடம்புக்கு
வெந்நீர் நனைத்த
அவள் புடவை துணி உத்தடம்..
நெற்றியிலும் நெஞ்சினிலும்
நீவும் தைலம்
யாவும் சுகம் ...

இறைவன் இடத்தை நிரப்பவே
தாயின் படைப்பு என்பார்கள் ..
ஏன் இறைவா
இப்போது அவளை
என்னிடம் இருந்து பிரித்து
தூரத்தில் வைத்து இருக்கிறாய்??? ...

அலைபேசியை
அணைத்துவிட்டேன் நேற்று
குரல்கேட்டு தவிப்பாள் என்று ...

அழைப்பு போகாததுக்கும்
தவித்து இருக்கிறாள்
பேசி ஆறுதல்
கொண்டாள் இன்று...

எழுதியவர் : கவியமுதன் (5-Dec-12, 6:53 pm)
சேர்த்தது : கவியமுதன்.பொ
பார்வை : 203

மேலே