பால்ய திருமணம்
தொலைகாட்சி தொடர்கள்
எட்டி பார்க்காத
மலைமுகடு கிராமங்களில்
அவ்வப்போது
ஐம்பதுவயது வாலிபருக்கும்
ஐந்துவயது பால்முகம் மாறா
பாலகிக்கும்
பால்ய திருமணம்
நடந்ததாக
பத்திரிகை
செய்தி சொல்லும்
படிப்போம்
பரிதவிபோம்
அரசு பார்த்துகொண்டா
இருக்கிறது
என பாய்வோம்
அறிவின் ஒளி எட்டி பார்க்காத
கிராமத்தில்
நடக்கும் அவலம் இது
எங்கள் ஊரில்
பதினாறு வயதான
பள்ளி மாணவிக்கும்
பக்கத்து சொந்தமென்ற
முப்பத்தி இரண்டு வயது
டாக்டருக்கும்
பகட்டாக
திருமணம் நடந்தது
பணத்தினை வாரி இறைத்து இருந்தார்
பதினாறின் அப்பா
அரசியல் வாதிகள் வந்து
அய்யர் இல்லா
திருமணம் இது
அறிவார்ந்த திருமணம்
என வாழ்த்திவிட்டு
அப்படியே
பந்தியில் அமர்ந்து
படைக்கப்பட்ட உணவினை
பசியாற உண்டார்கள்
சென்றார்கள்
பதினாறுக்கும்
முப்பத்தி இரண்டுக்கும்
பொருந்துமா என்பது
என்னுடைய
முதல் கேள்வி
பதினாறு வயது பெண்ணை
பணக்கார டாக்டர்
திருமணம் செய்தால்
அது பால்ய மனம் இல்லையா
படித்தவரே
இதற்கு மட்டும்
பதில் சொல்லுங்கள்