.........எங்கே பதில்?...........
உன் நிழலுக்குப்பக்கத்தில் பயணப்பட்ட உயிர்,
உயிறென்றே கருதியது உனை,
உறைவிடம் கடந்து நிறைவிடமானது உன் மனது,
அகன்றுசெல்ல வழியில்லாமல்,
அதை விளக்க மொழியில்லாமல்,
சுழன்றுகொண்டது வாழ்க்கை நீ விதித்த வட்டத்திற்குள்,
ஒரு நாள் நீ பிரிந்தாய் !
நான் மதியிழந்து மூர்ச்சையடைந்தேன் !!
ஏன் பிரிந்தாய் ? என்ன காரணம் ?
உயிர் பிரியத்தானேவேண்டும்?
என உன் பாணி உண்மையை சொல்லப்போகிறாயா ?
எனை தணலில் இருத்திய ஆண்மகனே ?