தாய்மை...... ( கௌரி சீனிவாசன் )

நரம்பை நசுக்கி ஊணை உருக்கி
என் உதிரத்தில் உதித்த உறவே!
என் பால் மடியின் கன்றே! நான்
பத்து மாதம் சுமந்த பௌர்ணமியே!

உன் பிஞ்சு விரலின் இஸ்பரிசத்தில் எல்லாம்
பித்துப் பிடித்தவளாகிறேன்!

என் தனங்கள் தாழ்வது உனக்காக!
என் தலை சாய்வது உனக்காக!
என் இரவுகளின் விழிப்புகள் எல்லாம் உனக்காக!

ஏக்கங்களின் வித்தே! என் ஏகாந்தத்தின் முத்தே!
உன் சின்ன உடலின் திண்டுதலில் திகைத்து போனது ஏன்?
உன் பிஞ்சு உதட்டின் புன்னகையில் புதைந்து போனது ஏன்?
இந்த கரிசல் காடு பூத்தது உன்னால்!
தாய்மையின் மகத்துவம் புரிந்தது உன்னால்!

உன் இஸ்பரிசத்திற்காகவே விழித்துக் கொண்டே விடியும் என் இரவுகள்....

எழுதியவர் : கௌரி சீனிவாசன் (7-Dec-12, 10:29 pm)
பார்வை : 217

புதிய படைப்புகள்

மேலே