சுதந்திர தினம்

சுதந்திரம் செங்கோட்டையில் மட்டும் தான்
அண்டிபிழைத்து உண்டிவாழும் நம்மவர்களும்
அரமாக தேய்ந்து உரமாக மாறி உழுத்து போன
குடிகளுக்கும்
தண்ணீருக்கே கண்ணீராய் தவமிருந்து
தவித்துபோன விவசாயிக்கும்
காடு மேடு கழனி கரை கட்டாந்தரை ஆக்கி
கஷ்டபடுபவர்க்கும்
சாலையிலே சகதியிலே சரிநிகர் சமமாய்
சங்கோஜமின்றி உண்டுகழித்து உறங்கி உயிர்வாழுபவர்களுக்கும்
ஒருநாள் வாழ்வதே உலக சாதனையாக மெச்சிக் கொண்டு நகர்பவர்களுக்கும்
சாதிக்கென்று சங்கம் வைத்து மனித மனமெனும் ஜாதியை தகர்ப்பவர்களை தராசு தட்டில் வைத்து சரிக்கு சமமாய் நடத்துவதாக நினைத்து உலாவிக் கொண்டிருப்பவனுக்கும்
நம் காசையே நமக்கு இனமாக கொடுப்பதை அறியாமல் கிடைப்பதை எண்ணி இளைப்பாறிக் கொண்டு இறுமாந்திருப்பவர்களுக்கும்
அடிப்படை சுதந்திரத்தை அடிச்சுவடிட முடியாத அதை ஆமோதிக்கவும் முடியாத அற்பமான நமக்கும்
சுதந்திரமா???? சூ தந்திரமா????? சுகந் தருமா?????
சூது வாதில்லாமல் சிந்தித்து சொல்லுங்கள்
சுதந்திரம் என்பது இச்சிறுவனுக்கும் செங்கோட்டைக்கும் தான்
நம்மவர்க்கு என்று தான் சுதந்திரம் எள்ளினகையாடாதீர்!!!
சிந்திப்பீர் !!!
சிகரம் தொடுவீர் !!!!