எங்கள் ஜாதி - ( கௌரி சீனிவாசன் )

இருப்பு பாதைகளுக்கு ஈயம் பூசிக் கொண்டிருப்பவர்கள் நீங்கள்......
எங்கள் கறுப்புப் பாதைகளுக்கு கருங்கல் தேடிக் கொண்டிருப்பவர்கள் நாங்கள்.....
வண்ணச் சிறகுகளுக்கு வர்ணம் பூசுபவர்கள் நீங்கள்...
எங்கள் உடைந்த சிறகுகளுக்கு மருந்து தேடிக்கொண்டிருப்பவர்கள் நாங்கள்....

காற்றின் வருடலை கவிதையாய் மொழிப்பெயற்பவர்கள் நீங்கள்...
அந்த காற்றையே உணவாய் விழுங்கிக் கொண்டிருப்பவர்கள் நாங்கள்...
நிழல்களுக்கு சாமரம் வீசுபவர்கள் நீங்கள்....
எங்கள் நிஜங்களுக்கே ஆடைத் தேடிக் கொண்டிருப்பவர்கள் நாங்கள்....

எங்கள் ஜாதி..............
உங்கள் ஏவளுக்கு செவிகள் தந்தது எங்கள் ஜாதி....
உங்கள் விழிகளுக்கு நித்திரை தந்தது எங்கள் ஜாதி..
உங்கள் செருப்புகளுக்கு தோல்கள் தந்தது எங்கள் ஜாதி..
உங்கள் தீக்களுக்கு சுடர்கள் தந்தது எங்கள் ஜாதி.....

உங்கள் பயணத்தில் எங்கள் பாதை புதைந்து கிடக்கிறது......
உங்கள் விழிப்பில் எங்கள் வழிகள் மறைந்து கிடக்கிறது.......
உங்கள் வெண்கொற்ற குடைகளை எல்லாம் வெளியேற்றுங்கள்
அது மறைத்துகிடந்த ஏணியில் ஏறிவரட்டும் எங்கள் ஏழை ஜாதியும்!!!!!

எழுதியவர் : கௌரி சீனிவாசன் (7-Dec-12, 11:08 pm)
பார்வை : 421

புதிய படைப்புகள்

மேலே