என் அறிமுகம்

என் எழுத்தின் வயது சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை.
எழுதத் தகுதியென கொண்டுள்ளது
எழுத்தின் மீது ஆர்வம் ஒன்றையே.

நல்ல விளையாட்டு, காணும் குழந்தையையும் பங்கேற்கத் தூண்டும்,
போலவே, என்னை எழுதத் தூண்டியது
நல்ல படைப்பாளிகளின் படைப்புகள்.

ஒளி உட்புகா கரும்புள்ளியா(Black Hole)??..
இல்லை.. எதிரலை கூட வெளியிடா கரும்புள்ளி(Black Hole).
எனக்கும் உரைத்தது, உட்புக கடின கவிதையுலகம் இல்லை இது,
உட்புகுந்த பின் வெளி விடா கவிதையுலகம் என்று.
அடிமையானேன் நல்ல கவிதைகளுக்கு.

கன்னித் தமிழென்றால்,
அவள் அழகை இன்னுங்க்கூடுதலாகும் ஒப்பனை கவிதை என்பதால்,
நான் இருக்குமிடத்தை எண்ணி இறுமாந்தம் கொள்வேனே...

கவிதைப் பயிர் எண்ணி விதைத்துள்ளேன்,
பார்போம், சிறுபிள்ளை வெள்ளாமை வீடு சேர்கிறதா என்று.

எழுதியவர் : யசோத கிருஷ்ணன். (8-Dec-12, 2:38 am)
பார்வை : 160

மேலே