தற்கொலை குறிப்பு

உழவுத் தொழிலே உயர்வு என எண்ணி உழுதேன்,
பிள்ளைகளின் பசி கூட ஆற்ற முடியா நிலையில்,
உலகுக்கே உணவளிப்பவன் உழவன் என்பதில் உழவனாய்
எனக்கு என்ன பெருமை?

ஒருநாள், உழவு மாடுகள் தீனி இன்றி இறக்கக் கண்டேன்,
நேற்றோ, பிள்ளையெனக் கண்ட நெற்கதிர்கள் கருகி இறக்கக் கண்டேன்,
நாளை, என் பிள்ளைகள் பட்டினியால் இறக்கக் காணக்கூடாது என்றே
இன்று நான் இறக்கிறேன்.

எழுதியவர் : யசோத கிருஷ்ணன். (10-Dec-12, 1:31 am)
சேர்த்தது : யசோத கிருஷ்ணன்
பார்வை : 127

மேலே